அன்னக்கிளி 44
இண்டையோட அன்னக்கிளி வெளிவந்து 44 வருசம்.... இந்த படம் தான் ராஜா எண்ட ஒரு இசைஞானியை உலக்குக்கு அடையாளம் காட்டின நாள் .... அவரின் முதல் பாடல் அன்னக்கிளி உன்னை தேடுதே ... பாடல்.
ஜானகி அம்மாவின் ஹம்மிங்கோட தொடங்கும் இந்த்பாட்டை அனாயாசமா ஆபேரி ராகத்தில காட்டாறு போல வடிச்சிருப்பார் ராஜா..... இதுவரையில conga drums ஜ அனேகமா எல்லாப் பாடலிலையும் MSV பாவிச்ச மாதிரி தபேலாவை பாடல் முழுக்க இழையோடி அதுக்கு மேலால புல்லாங்குழலையும் வயலினையும் பின்னி இருப்பார்... அந்த வேய்ங்குழலோட ஆர்மோனியக் கட்டைகளுக்கு இடையில அன்னக்கிளி பிறந்தநாள் இண்டைக்கு ... அண்டைக்கு தொடங்கின ராஜாவின் ராஜ்ஜியம் ஆண்டு மட்டும் ராங்கா போகவில்லை....
இன்றும் ராஜாவை விஞ்ச யாரும் இல்லை... இவர் மாதிரி ஒரு இசைச்சித்தர் யாரும் இல்லை 🙏

கருத்துகள்
கருத்துரையிடுக