SPB என்ற மகா கலைஞன்


 



SPB என்ற மகா கலைஞன்

ஒரு எழெட்டு வயசில சங்கராபரணம் பாட்டை TV ல பார்த்துட்டு யார் பாடினது எண்டு தெரியாமலே வாய்க்குள்ள முணு முணுத்துக் கொண்டு திரிஞ்ச ஒரு காலம்... அந்தளவுக்கு அந்தக் குரலில் ஒரு லயிர்ப்பு.... பிறகு எண்பதுகளில ரேடியோ சிலோன் ஒலிபரப்பிய பாடல்களினூடான குறிப்பாக " இது ஒரு பொன்மாலைப் பொழுது"  அறிமுகங்களில் தான் SPB என்ற ஒரு பாடகர் அறிமுகமாகிறார் எனக்கு ....குறிப்பாக ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" எண்ட பாட்டு  அண்டைக்கு தொடங்கி இண்டு மட்டும் பட்டி தொட்டி எல்லாம் குறிப்பா UFC பார்ட்டிகளின் சிக்னேச்சர் சோங்...😎  எண்ட பாட்டை கமலஹாசனின் நடிப்புக்க்கு சவால் விடும் வகையில் பாடியிருப்பார் SPB... இது ஒரு பொன்மாலைப் பொழுது  பாடல் ... கனவுகளோடு இருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு .. வாழ்க்கையை மாற்றிய பாடல்...  இது SPB ஐ தவிர யார் பாடியிருந்தாலும்  இவ்வளவு அழகாக பாடியிருப்பார்களா என்பது சந்தேகமே... இந்தப் பாடலால் SPB பிரபலமானாரோ என்னவோ இலங்கை வானொலி பிரபலமானது என்பது மறுக்க முடியாது👌

"மடை திறந்து தாவும் நதி அலை நான்.. மனம் திறந்து பாடும் சிறு குயில் நான்.. இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது" என்ற பாட்டின் மெட்டுக்கு தன்குரலால் மெருகூட்டியிருப்பார் SPB.. காதலின் தீபம் ஒன்று. மண்ணில் இந்த காதல் அன்றி, மன்றம் வந்த தென்றலுக்கு, இளைய நிலா பொழிகிறதே, வளையோசை கலகலவென, என கோடி முறை கேட்டும் அந்த காந்தக் குரலின் ஈர்ப்பு துளி கூட குறையவில்லை....

இதை விட அந்தி மழை பொழிகிறதே பாடல்...எஸ் பி பியின் இன்னொரு சூப்பர் டூப்பர் கிட்... பாடல்..

 கேளடி கண்மணி பாடகன் சங்கதி... மண்ணில் இந்தக் காதலன்றி ... பாடல்களால் படத்தில்  ரசிகர்களை எங்கோ கொண்டு போயிருப்பார்... 

எல்லாவற்றிற்கும் மேலாக

இளைய நிலா பொழிகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே


முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ..பாடலில் அனாயாசமாக உச்சஸ்தாயியை தொட்டிருப்பார்  அது போக  கிற்றாருக்கும் புல்லாங்குழலுக்கும் இடையில் எம் கண்முன்னே  நிலா வை நிறுத்தியிருப்பார்... 

பனிவிழும் மலர்வனம் பாடலில்... இடையிடையே தபேலாவின் நடையுடன் பாடலை நகர்த்தியிருப்பார்...அஜித்துக்கு இவர் பாடிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் தனி தினுசு. அவரே அவருக்காகப் பாடிய ‘மண்ணில் இந்தக் காதலன்றி...’ வேற லெவல். தளபதி படத்தில் காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாடலில்

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜென்மம் நானில்ல

பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே

என்ற வரிகளை யேசுதாசுக்காகவே உருகிப் பாடியது போலவே பாடியிருப்பார்... அது போல யேசுதாசும் ஒரு மேடை நிகழ்ச்சியில் SPB இன் நட்பை நெகிழ்த்தியிருப்பார்.




அப்பிடியே நகர்ந்து 90 களுக்கு வந்தால் ராசா போய் ரகுமானின் இசையாட்சி தொடங்க....அங்கும்  SPB இன் சர்க்கார்...ரோஜா வில் தொடங்கி....ஒருவன் ஒருவன் முதலாளி.... எல்லாவற்றுக்கும் மேலே ....அஞ்சலி அஞசலி... SPB இன் பாடல்களில் ஒரு மைல் கல்....  தொடர்ந்து வித்யாசாகரின் இசையில் இவர் பாடிய ‘மலரே மெளனமா’ கேட்பவர்களை உருக்கிவிடும்.

இப்படி எத்தனை பாடல்களை எழுத முடியும்...


இறை பக்தி, குரு பக்தி இரண்டும் கொண்டு, கனிவுடனும் அன்புடனும் பாடிய  பாடும் நிலா இன்று மறைந்து விட்டது... இருந்தாலும் நீவிர் உம் இசையால் வாழ்வீர்🙏🙏🙏🙏

கருத்துகள்