தர்பாரில் அண்ணாத்தை என்ற ஆளுமை
சில பேருக்கு அதிஷடம் கூரையைப் பிச்சுக்கொண்டு வரும். பல பேர் அந்த அதில காணாமல் போய் விடுவினம். சிலர் அதை வச்சு தங்கட திறமையாலும் கடின உழைப்பாலும் எட்ட முடியாத உயரத்துக்கு போய் விடுவினம்...
அதுமாதிரித்தான் சாதாரண பஸ் கண்டக்டர் இருந்த ஒருத்தரால இந்தியாவின்ர சுப்பர்ஸ்ராரா வரமுடிஞ்சது என்றால் அது மிகையல்ல ....
மூன்று முடிச்சில் ரஜனிக்காந்தாக தமிழ் சினிமாவின் கதவைத் திறந்த சிவாஜிராவ், அபூர்வராகங்களில தொடங்கி, மூன்று முடிச்சுப் போட்டு ,புவனாவைக் கேள்விக் குறியாக்கி, ஆடுபுலி ஆட்டமாடி, பதினாறு வயசில பரட்டையா பட்டையைக் கிளப்பி,முள்ளும் மலரில கறுப்பன் காளி , பொல்லாதவனா தில்லு முல்லுச் செய்த இந்திரன் சந்திரனை போக்கி ராஜாவான ரஜனி தனிக்காட்டு ராஜாவாகி மூன்றுமுகத்தில ஒரு நெற்றிக் கண்ணாகி, நான் நல்லவனுக்கு நல்லவன் எண்டு சொல்லி பில்லாவில கடத்தல் செய்து, மீண்டும் மனிதனான அன்புள்ள ரஜனிக்காந்த் அண்ணாமலையில் பால்விற்று பணக்காரனாகி, மன்னில வேலைக்காரனா இருந்தவரை வீட்டோட மாப்பிள்ளையாக்க, மீண்டும் உழைப்பாளியாகி, பாட்ஷாவில கடத்தல் செய்து , நீலாம்பரிக்கு சவால் விட்ட படையப்பா, பாபா வில ஆன்மீக அரசியல் செய்து ஆட்டம் கண்டு ,சந்திரமுகியில் வசூல் வேட்டை நடத்தினார்...இப்படியாக தொடங்கிய ரஜனியின் இரண்டாம் இன்னிங்ஸ், சிவாஜியில் சக்கை போடு போட்டு , எந்திரனில் வசூல்ராஜாவாகி, 90 களில் தொலைந்த ரஜனிக்காந்த் காலா லில் ஜெயில் கதவைத்திறந்து கொண்டு நெருப்புடா நெருங்குடா என்று வின்ரேஜ் ரஜனியாக உருவெடுத்து தமிழ் சினிமாவின் தர்பாரில் அண்ணாத்தையாக மீண்டும் உருவெடுத்திருக்கிறார்...
கமல் கஷ்ரப்பட்டு கலைக்காக தன்னையே அர்ப்பணித்து நடிக்க ரஜனி என்ற மாஸ் ஹீரோ தனது அக்மார்க் ஸ்டைலையும் நடையையும் விறுவிறு வசனங்களையும் மூலதனமாக கொண்டு தமிழ் சினிமாவின் தர்பாரில் தனிக்காட்டு ராஜாவான சிவாஜிராவ் என்ற ஒரு மனிதன் கலைவாழ்க்கையில் மட்டுமல்ல தனது தனிவாழ்க்கையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
கமல் கஷ்ரப் பட்டு படிச்சு மட்டு மட்டாக சோதினை பாஸ்பண்ணும் மாணவன் போல , ரஜனி சோதினைக்கு முன்னம் ஒருக்கா புத்தகத்தை திருப்பி பார்த்துட்டு 100அடிக்கிற intelligent kid மாதிரி .....
கருத்துகள்
கருத்துரையிடுக