தீபாவளியும் நரகாசுரனும்
இண்டைக்கு தீபாவளி பண்டிகை. இந்த நாளில நரகாசுரன் என்ற அரக்கனின் அட்டூழியங்களை தாங்க இயலாமல் துன்பப் பட்ட மக்களை காக்க கிருக்ஷ்ணர் அவனை அழித்ததாயும் அவன் தன் அழிவை மக்கள் ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால காலங்கள் தோறூம் தீபங்கள் ஏற்றி வெடி கொளுத்தி மக்கள் இதை கொண்டாடி வருகினம் எண்டு நாங்கள் சின்னவயசில புத்தகங்களில படிச்சிருக்கிறம்.
அதிலயும் சின்னவயசில தீவாளி வருகுதெண்டா ஒரே புழுகம். ஒண்டு வெடி கொளுத்தி அட்டகாசம் செய்யலாம் ரெண்டாவது புது உடுப்பு போட்டு சொந்தக்காரர் வீட்ட போகலாம்...... ஆனால் . வயசு போகப் போக கடைசியா தீபாவளி எண்டா பிரண்ட்ஸோட கூடியிருந்து தண்ணியடிச்சு சாப்பிட்டு சந்தோசமா கழிக்கிறது எண்டமாதிரி வந்து ஒரு குடும்பம் பிள்ளையள் எண்டு வந்தா அவையோட தீபாவளி கொண்டாடுறது எண்டு ஆயிடுச்சு.
உண்மையில தீபாவளி பெயர்க் காரணம் தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் என்பது தான் உண்மையான கருத்து...ஆக
தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
எனவே தீபாவளி என்பது ஒரு பண்டிகை,மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்த்து மகிழ்ந்து வீடுகளில் விளக்கேற்றி சுற்றங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆணவம் அகங்காரங்களை விடுத்து மகிழ்ச்சியாக இருக்க உருவாக்கிய ஒரு தினமே....
எப்பிடி நாங்கள் கிறிஸ்துமஸ கொண்டாடுறமோ, ரமழானுக்கு Eid Mubarak சொல்லிறமோ அதே போல Happy Diwali எண்டு சொல்லி சந்தோசமா இந்த பண்டிகையை கொண்டாடுவம்..
அதை விடுத்து நரகாசுரன் எங்கட பாட்டன் அப்பன் , எண்டு சொந்தம் கொண்டாடி சும்மா மனதில பகையையும் காழ்ப்புணர்வையும் வளர்க்காமல் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக