MS DHONI "the captain cool"
2007 Sep 24 ஜ கிரிக்கெட் காதலர்கள் மறக்க மாட்டார்கள். "எங்கிருந்தோ வந்தான்" என்ற பாடல் மாதிரி ஒரு பையன் நீண்ட தலைமுடியுடன் இந்தியாவை களத்தில இறக்கினான்... கிரிக்கெட் ஜாம்பவான்கள் டிராவிட், சச்சின், கங்குலி எண்டு எல்லாரும் பின்வாங்க ஒரு கத்துக்குட்டி டீமோட உள்ளுக்க இறங்கி தன்ர பரம வைரியோட வந்து கடைசி ஓவரில முன் அனுபவம் இல்லாத ஜோகிந்தர் சர்மாவை வைச்சு கடைசி ஓவர் நாலாவது பந்தில எகிறி சிக்ஸர் அடிக்க வந்த மிஸ்பா வை அனாயாசமா அவுட்டாக்கி முதலாவது T20உலகக் கோப்பையை தூக்கிறான் அந்தப் பையன்...
அவன் தான் M S DHONI, உலகம் கிறிக்கெற்றையே புரட்டிப் போட்ட ஒரு டிக்கட் கலெக்ட்ர். பிறகு 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி, 43000 மக்கள் கூடிய மும்பை வான்கடே மைதானத்தில இறுதிப் போட்டி தொடங்கியது.
இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு முறை மட்டுமே உலக கோப்பையை வென்று இருந்தது.
தோனி, கபில்தேவ் போல் கோப்பையை வெல்வாரா? இல்லை சங்ககரா, அர்ஜுனா ரணதுங்கா போல் கோப்பையை வெல்வாரா? என்ற ஆவல் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில்.
274 ரண்கள் எண்ட இலக்கை அடிக்க இறங்கியது இந்தியா, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் அதிரடி மன்னன் சேவாக், ரண் மெஷின் கோலி எண்டு அடுத்தடுத்து விழ காம்பீருடன் சேந்து 49.2 ம் ஓவரில் அனாயாசமாக ஒரு சிக்ஸர் அடிச்சு உலகக் கோப்பையை சச்சினின் கையில் கொடுத்துட்டு ஒரு மூலையில் சிரித்தபடி சிம்பிளா நிண்டான்... அதுக்குப் பிறகு சாம்பியன் டிராபி ஜ பி எல் இப்பிடி எத்தனையோ... கிரவுண்டுக்க யார் என்ன சொன்னாலும், என்ன நடந்தாலும் தன்னிலை மாறாது கூலா எல்லாத்தையும் கான்டில் பண்ணிட்டு ஒண்டும் நடக்காத மாதிரி இருக்கிறது தான் டோனியின் ஸ்ரைல்.. அதனால தான் மிஸ்ரர் கூல் எண்டு எல்லாரும் கூப்பிடினினம்....அதுக்கு மேல பற்றை சுழட்டி அடிக்கும் அந்த ஹெலிகாப்டர் ஷொட் இன்று மட்டும் ஒருவராலும் முடியவில்லை....அது போக மிட்கிரவுண்டில் நிண்டு கேட்டும் ரிவியூ எண்டைக்குமே பிழைத்ததில்லை ...ஒரு சீரிசில எல்லா மட்சிலயும் சொதப்பி பைனல்ல வந்து ஒரு சிக்ஸரோட பினிஷ் பண்ணிட்டு கோப்பைய பையங்கள் கையில கொடுத்துட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே எண்டு ஒரு மூலையில நிண்டு மகளோட சிம்பிளிசிட்டி யாருக்கும் வராது... இப்பிடி எத்தினை சாதனைகள்.... இந்த அத்தனைக்கும் சொந்தக்காரன் MS DHONI இன் பிறந்தநாள்.... இனி எத்தினை சகாப்த்தம் வந்தாலும் டோனி போல ஒருவன் வரமாட்டான். ஆயிரத்தில் ஒருத்தனவன்.....Happy birthday to legendary cricketer, the best finisher , Mr Cool Ms Dhoni......

கருத்துகள்
கருத்துரையிடுக