பிக் மட்ச்
ஒரு மாதிரி இந்த வருசம் பிக்மட்ச் முடிஞ்சுது 😢 உலகம் முழுக்க இருக்கிற சென் ஜோண்ஸ் பெடியள் ஏதோ ஆனையிறவு காம்பை அடிச்சு பிடிச்சமாதிரி புளுகுகில வட்சப்பிலயும் பேஸ் புக்கிலயும் கறுப்பு சிவப்பு கலரோட படம் போட்டு கொடியையும் பிடிச்சுக் கொண்டு பிரவுட் டு பி ஜொணியன்ஸ் எண்டு திரியினம்... இஞ்சாலை பாத்தா சென்ரல் பெடியள் எல்லாம் துறந்த கௌதம புத்தர் மாதிரி அமைதியா இருக்கிறாங்கள்...😎 இதெல்லாம் விளையாட்டில சகஜம் தானே... என்ன இருந்தாலும் பிக் மட்ச் எண்டுறது அந்தக்காலத்தில இருந்து நல்லூர் தேர்த்திருவிழா மாதிரி யாழ்ப்பாணத்தில அனேகமாக கிறிக்கெற் ரசிகர்களை இணைக்கிற விழா எண்டே சொல்ல வேணும்...அதுகும் தொண்ணுறுகளில எங்களுக்கு இருந்த ஒரே ஒரு பொழுது.... பிக்ட் மட்ச் வருகுதெண்டா யாழ்ப்பாணம் ரவுண் முழுக்க கொண்டாட்டம் தொடங்கிடும்... அப்பத்தான் சென் ஜோணஸ் சென்ரல் பெடியள் தங்கட கம்பயினை தொடங்குவாங்கள்.. இதுக்குள்ள மாட்டுறது சுண்டுக்குளியும் வேம்படி பிள்ளையளும்தான்... சென் ஜோண்ஸ் கார் வைற் கவுசை சுத்துறமாதிரி சுண்டுக்குளி பள்ளிக்கூடத்தை ( அது முன்னுக்கு வெள்ளை பில்டிங், பெரிய கேட் போட்டிருக்கும் 😄) சுத்தி சுத்தி வருவினம்... சுண்டுக்குளி பிள்ளையளும் தங்கட பார்ட்னர் ஸ்கூல் எண்டு சப்போரட் பண்ணுவினம்... ஆனா வேம்படி பிள்ளையளுக்கு தங்கட பார்ட்னர் ஸ்கூல் ஜப்பனா கிண்டுவா சென்ரலா எண்டு எப்பவுமே ஒரு கொண்பியூசன் ஆனாலும் பிக்மட்ச் அண்டைக்கு தங்கட சப்போரட்டை கொடுத்திடுவினம். இப்ப பிக்மட்ச் அண்டைக்கு ஹீரோ சைக்கிளும் லுமாலா சைக்கிளும் ஏசியா சைக்கிளும் சிவப்பு கறுப்பு, நீலம் பிரவுண் ரீசேட்டுகளோட டபிள் ரிபிளா யாழ்ப்பாணம் முழுக்க வலம் வரும்...அதுக்குள்ள அந்தக்காலத்தில காவல் துறை கண்டா அவைக்கும் "எங்கட துறை காவல் துறை”
“மக்களின் துறை காவல் துறை”
“எங்கட துறை காதல் துறை”
எண்டு ஒரு குறூப் பாடிக் கொண்டு ஓடும்.... இதுக்குள்ள இன்னொரு குறூப் தாரை தப்பட்டையோட கொலிஜ் கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“எங்கட கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
central“அப்பே கொலிஜ்.. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“வாட்ஸ் த கலர்? ரெட் அண்ட் ப்ளக்”
“ஹூ இஸ் த கப்டின்?”
“சென்றலால ஏலாது”
“ஏலுமெண்டா பண்ணிப்பார்”
“ஏலாட்டி விட்டிட்டு போ” எண்டு பாடிக் கொண்டு போக அங்கால சென்ரல் காரங்கள் வாளி வாளி பசைவாளிஎண்டு கத்திக் கொண்டு போவினம்
இப்பிடியே போனால் சென்ரல் கிரவுண்ஸ் வந்திடும்.அங்க ஒரு பக்கம் சிங்களவன் எரிச்ச நூலகம் மற்றப் பக்கம் மணிக் கூட்டு கோபுரம் பிட்ச்சை நோக்கி இருக்கும்... ஒரு காலத்தில ஜாவிட் மியானடாட் அதுக்கு மேலால சிக்ஸர் அடிச்சதா சொல்லுறாங்கள் உண்மை பொய் தெரியாது... இது இப்பிடி இருக்க மட்ச் களை கட்டும் சென்ரலுக்கு முன்னால இருக்கிற மரத்துக்கு கீழ கதிரையளைப் போட்டு எல்லாப் பிரபலங்களும் வந்திருக்கும்... அதில ஒருபக்கம் சூரியரும் மற்றப் பக்கம் இரும்பரும் தங்கட குழுவோட இருப்பினம்..
அங்கால போனால் சுண்டுக்குளி பிள்ளையள் யும் வேம்படி பிள்ளையளும் மரத்துக்கு கீழ குடையயும் பிடிச்சுக் கொண்டு இருகக அவை சுத்தி ஒரு குறூப் ரவுண்டுஅடிக்கும்....
இதுக்குள்ள நடுவில ஆட்டம் களை கட்ட தகரங்களும் மண்ணெண்ணை பரலுகளும் சியர் பண்ண சத்தம் விண்ணை முட்டும்... இதுக்குள்ள நாங்களும் கீறல் விழுந்த பழைய சண்கிளாசையும் பகி ரவுசரும் போட்டு கிரவுண்டை சுத்தி வலம் வருவம்... இப்பிடியே மூண்டு நாள் போகும்.... ஆக அந்தக் காலத்தில் பிக்மட்ச் என்றது பள்ளிக்கூட பேதமில்லாமல் எல்லாரையும் இணைத்த ஒரு புள்ளி... இது போல் இன்னும் நிறைய விளையாட்டு விழாக்கள் வரவேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு மகிழவேண்டும்.....

கருத்துகள்
கருத்துரையிடுக