ஊரில இருந்த காலத்தில நாங்கள் ஒரு எட்டு வயதில இருந்து பத்து பதினொண்டு மட்டும் பின்னேரத்தில பள்ளிக்கூடத்தால வந்த பிறகு கோயில் வீதியில ரின் அன்ட் போல் (பிள்ளையார் பந்து) விளையாடுறதுதான் வேலை. அதில எங்கள விட பெரிய பெடியள் பந்தால முதுகில எறியுற பொழுது வலிக்குமே ஒரு வலி... ஆனால் அதையெல்லாம் உச்சி ஒடி அந்த ரின்னுகளை அடுக்கி கடைசி போணிய தூக்கி ஒரு வைச்சு வின் பண்ணுற சந்தோசம் இருக்கே IPL இல டோனி கடைசி பந்தில அடிச்ச சிக்ஸரிலும் பார்க்க சந்தோசமானது😁😁😁😁
கருத்துகள்
கருத்துரையிடுக