கொரோணா பரிதாபங்கள்....
இந்தா இந்தா எண்டு 2020 சம்மரும் வந்திட்டுது .. அதுக்கு முதல் ஆற்ற கண் பட்டுதோ கொரோணா வந்துட்டுது ... ஆரவாரமா "விஷ் யூ ஏ கப்பி நீ யூ இயர் எண்டு பாடிஇரவிரவா வெடி கொளுத்தி வரவேற்ற 2கே20 எல்லாரையும் வீட்டுக்க அடைச்சிட்டுது கண்டியளே... சீனாவில வூகானில கொரோணா வர நாங்கள் விடுப்பு பார்த்துக் கொண்டு இருந்துட்டு அப்பிடியே இத்தாலிக்காலையும் ஸ்பெயினுக்காலையும் வந்த உடனை அலேட் ஆகினாங்கள்... சனம் எல்லாம் டொயிலட் பேப்பரில இருந்து சாப்பாட்டுச் சாமான் மட்டும் பதுக்கி வைக்க கொரோணாவும் வந்து சேர்ந்துது. அது ஆடின ஆட்டத்தில நாடு முழுக்க லொக்டவுன் ஆக எல்லாம் எல்லாரும் வீட்டுக்க அடைஞ்சினம்... ஆளையாள் பாக்கிறது கூடாது வெளில போகக் கூடாது ஒண்டும் திறக்கக் கூடாது எண்டு அரசாங்கம் சட்டம் போட குஞ்சு குருமானில இருந்து வயது போனவை மட்டும் போன போன இடங்களில லொக் டவுனாகிட்டினம்.. சும்மா சொல்லக் கூடாது கண்டியளே எங்கட ஆக்கள் ஒரு ரெண்டு கிழமை யில விழிச்செழும்பி ஒரு குறூப் சமையல், கார்டினிங் எண்டு இறங்கிச்சுது இன்னொரு குறூப் கெல்த் கொன்சிசாகி வாக்கிங்🚶♂️ யோகா எண்டு இறங்கிட்டுது... இதுக்குள்ள குஞ்சு குருமானெல்லாம் ஒன்லைன் டியூசன் எண்டு இறங்க டியூசன் வாத்திமார் சூமில 'வாத்தி கம்மிங் " 😎எது எப்பிடி இருந்தாலும் இப்படியும் வாழலாம் எண்டதை சொல்லித் தந்தது கொரோணா பாருங்கோ. இனியாவது வாழ்க்கையை ரசித்து வாழப் பழகுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக