சோதினை மேல் சோதினை


ரெண்டு மூண்டு  கிழமையளுக்கு முன்னம் O/L வந்தது. உடனை எல்லாரும் அந்த பள்ளிக்கூடம் இத்தினை 9A இந்தப் பள்ளிக்கூடம் இத்தினை 9A  இந்தப் பள்ளிக்கூடம் இந்த முறை நல்லா செய்யேல்ல  எண்டு கொஞ்சப் பேர் தாங்கள் படிச்ச பள்ளிக்கூடங்களை பேஸ்புக்கிலயும் வாட்சப்புகளிலயும் புரமோட் செய்ய இன்னொரு குறூப் என்ர அக்கான்ர பிள்ளை க்கு 9A முன்பின் பாக்காத கசினின்ர பிள்ளைக்கு 9A எண்டு பீத்த நடுவில இன்னொரு குறூப் ரிசல்டுகளை மாவட்ட ரீதியாயும் மாகாண ரீதியாயும் அனலைஸ் பண்ணி கொம்பரிசன் போடும்....இதுக்குள்ள ஒம்பது A எடுத்த பிள்ளையளின்ர அம்மா அப்பா வேற இஞ்சினியர் டாக்குத்தர் கனவு காணுவினம்...எல்லாத்துக்கும் மேல இவையளின்ர படமும் பேரும்  உலகமெல்லாம் ஓடும்....நல்ல விசயம்... ஒரு பிள்ளையளுக்கு மோட்டிவேசன் தான் ஆனா ஒரு  ஒண்டு ரெண்டு கிழமைக்கு பிறகு பார்த்தா சோதினையில நல்லா செய்யாத பிள்ளையளின்ர தற்கொலைகளும்  இந்த பேஸ்புக்குகளிலையும் வாட்சப்புகளிலையும் அரங்கேறும்...உண்மையில  இந்தப் பிள்ளையள் தான் கவனிக்கப் படவேண்டியவை.... இவைக்கு என்ன பிரச்சினை எண்டு ஒவ்வொரு பள்ளிக்கூடமும் பேஸ்புக்  போராளிகளும் உதவினா நாங்கள் எங்கையோ போகலாம் அனியாய சாவுகளையும் தடுக்கலாம் அதோட மொபைலும் மோட்டச் சைக்கிளும் வேண்டிக் கொடுக்கிற அம்மா அப்பா பிள்ளை படிக்குதா  டிக் டொக்கில உலாத்துதா எண்டும் பாக்க வேணும்...எல்லாத்துக்கும் மேல அங்க கனக்க ஒப்சனல் படிப்புகள் இருக்கு அதை வடிவா படிச்சு நல்லா வரலாம் இதை எல்லாம் விட்டுட்டு  நாங்க படிப்பில பின்னுக்கு போட்டம்  எண்டு அழுதா யார் என்ன செய்ய முடியும்....

எய்தவன் இருக்க அம்பை ஒரு நாளும் நோகக் கூடாது...😔

கருத்துகள்