மதமும் மனிதமும்...


 மதம் எண்டுறது மனிதனை ஒரு கட்டுக்குள் வைச்சிருக்கிறதுக்கு பெரியவர்கள் உருவாக்கின ஒரு ஒழுக்கமுறையே தவிர தவிர அது யாருக்கும் சொந்தமில்லை. நானும் மதம் மாறலாம் நீங்களும் மதம் மாறலாம் ஏன் கடவுள் இல்லை எண்டு நினைக்கிற எங்கட அட்மினும் கடவுளை நம்பலாம் அது அவரவர்  விருப்பம்.... ஆஸ்திகனா இருக்கிறவன் எல்லாம் நல்லவனில்லை நாஸ்திகனா இருக்கிறவனெல்லாம் கெட்டவனில்லை....  ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில இருந்து வேல்ஸ் கோயில் வரை வெள்ளைக்காரன் எங்கட மதத்தை பின்பற்றுகிறான் அது அவனை ஆட்கொண்டுள்ளது அதன் மூலம் அவன் எதையோ அடைய முயற்சிக்கிறான்  அதே போல் எங்கடை ஆக்கள் ஜெகோவா எண்டு திரியினம்... அது அவையை  வளப்படுத்தும் எண்டா மனிசனா வாழ வழிவிடும் எண்டா அதில பிழையேதும் இல்லையே....  அது அவை அவையின்ர நம்பிக்கை🙏 எப்பவும் ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்

ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்.....


மதம் எண்டுறது ஒரு டிசிப்பிளினே தவிர ஒரு ரூள் அல்ல ....எங்கடை பிள்ளையளுக்கு  நல்ல பழக்க வழக்கங்களுக்கு  படிப்புக்கு நாங்கள் நல்ல பள்ளிக்கூடம் தேடுறமாதிரி  அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றமாதிரி மதத்தையும் வழிபாட்டு இடத்தையும் தெரிவு செய்யலாமே தவிர *மதத்தின்ர பெயராலை மதம் பிடிச்சு ஆடக்கூடாது...



ஆக ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தங்களது நம்பிக்கையை அடுத்த பிரிவினர் மீது திணிக்கக் கூடாது😎

ஒருவர் தானாக விரும்பி மதத்தை மாற்றிக்கொண்டால் அதற்கு குறை கூற முடியாது. ஆனால் அப்பாவிகளை, ஏழ்மையை, பயன்படுத்தி ஆசைகாட்டி, அச்சுறுத்தி, பணத்தை காட்டி மதம் மாற்றுவது ஒரு பாவச்செயல்.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிடப்பட்ட சமுதாயத்தை ஒழிக்க வன்முறையால் மட்டுமல்ல, பல வழி முறைகளில் தொடுக்கப்படுகிற ஒரு மறைமுகப் போராகும்

சுருங்கக் கூறில்  மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் ‘மதம் ஓர் அபின்’ (போதைப் பொருள்) என்றார். மனிதன் தன்னுடைய ஆத்மீகத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிற ஒரு வழி மதம். 


கஞ்சா அடிச்சுட்டு கூத்தாடுற ஜக்கியும் கைலாசா நித்தியும் ஜெகோவா எண்டு கத்தி கத்தி நம்ப வைச்சு கழுத்தறுக்கிற பாதிரிகளும் தீவிரவாதம் படிப்பிக்கிற இமாம்களும் இருக்கிறக மதங்களில நாங்கள் எங்களுக்குள்ள கடவுளைத் தேடுறது தான் நல்லவழி....


திருமுலர் சொன்னமாதிரி 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே


🙏🙏🙏🙏

கருத்துகள்