தொண்ணூறுகளில் இளமைக் கால விளையாட்டுகள்
பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில 80 90களில் சிறுவர்களின் இளைஞர்களின்ர பெரும்பான்மையான விளையாட்டு கிறிக்கெற் மற்றது வொலிபோல். உண்ணமையான வொலிபோல் மட்ச் பாக்க போகோணும் எண்டா பின்னேரம் ஒரு நாலுமணிக்கு எங்கையாவாது ஒரு கோயில் வீதி அல்லது ஏதாவது சனசமூக நிலையங்களுக்கு முன்னால அல்லது பின்னால இருக்கிற வளவுக்கு போனால் காணும்... ஒரு 25 வயசில இருந்து 45 50 வயசு மட்டும் இருக்கிறவை ரெண்டு ரீம் பிரிச்சு விளையாடுறதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... பொதுவா ஆறு ஏழு பேர் ஒரு ரீமில இரு ப்பினம் சென்ரில நிக்கிறவரும் பின்னுக்கு நிக்கிறவையும் தான் ரீமின்ர பாக் போண்... நடுவில ஒரு சின்னப் பெடிப்புள்ளை நெற்றுக்கு நிப்பார் ..உண்மையில அவருக்கு பந்து போகாது அவரை பந்து பொறுக்கிறதுக்குத்தான் அப்பிடி வைச்சிருப்பினம்.....இப்ப கேமுக்கு வருவம் 😎 ஒரு ஐம்பது சதக்காசை ரொஸ் பண்ணி ஒரு பக்கம் சேவிஸோட ஸ்ராட் பண்ணும்.. உண்ணமையில நல்ல ரீமா இருந்தா பந்து நெற்றுக்கு மேலால குறைஞ்சது 10 நிமிசமாவது மிதக்கும்... சென்ரில நிக்கிறவர் சும்மா கையைக் கூப்பி ஸ்ரைலா ஒரு நெம்பு நெம்பி பந்தை இலாகவமா அடிக்கிற விதம் எல்லாருக்கும் வராது... குறிப்பா கையை திருப்பி ஒரு ஆங்கிளில பந்த டைவேட் பண்ணிற நேரத்தில மற்றப் பக்கம் நிக்கிறவை இலாகவமா அண்டகான்ட் சொட்எடுத்து குடுக்க அங்கால நிக்கிற சென்ரர் டாஷ் அடிக்க ட்ரை பண்ணுற வித்தையை நாள் முழுக்க பார்க்கலாம்... இது ஒரு நாலு மணிக்கு தொடங்கினா ஒரு ஏழு மணிமட்டும் நடக்கும்... இதுக்குள்ள வளவை சுத்தி ஒரு ரசிகர் கூட்டம் சேரும்....வளவின்ர ஒரு பக்கம் எதாவது வீட்டின்ர மதில் எண்டா அந்த வீட்டில இருக்கிற வீட்டுக்காரர் குறிப்பா குமர் பிள்ளையளை வைச்சிருக்கிறவை இந்த வளவுக்கை வரக்கூடாதெண்டு உலகத்தில இருக்கிற கடவுளை எல்லாம் வேண்டுவினம்🙏😁 இது ஒரு பக்கம் இருக்க சின்னப் பெடியளுக்கு கிரிக்கெட்...
என்னதான் நடந்தாலும் பின்னேரம் நாலுமணி எண்டா ஊரில இருக்கிற குஞ்சு குருமானுகள் எல்லாம் ஒரு பற்றையும் பந்தையும் கொண்டு எங்கேயாவது கோயில் வீதியிலயோ வளவுக்குள்ளையோ சேர்ந்திடும்... அதில சேர்ர ஆக்களைப் பொறுத்து கேம் பிளான் தீர்மானிக்கப் படும்.. உதாரணமா ஒரு நாலஞ்சு பேர் எண்டா பற்றுக்கு கீழ நம்பர்களை எழுதி அங்கால கோடு கீறி அதை தொட்டு பற்றிங் ஓடர் தீர்மானிக்கப்படும்.... அண்டைக்கு விளையாட பெடியள் கூட வந்தால் ரெண்டு ரீம் பிரிபடும்... அதில குறிப்பா ரெண்டு all rounders ரீம் கப்ரினாகி தங்கட ரீமை செலக்ட் பண்ணுவினம்.. அந்த நேரத்தில இந்த IPLல்ல ஏலத்தில எடுக்கிறமாதிரி நல்லா விளாடுற பெடியளை சூஸ் பண்ணிடுவாங்கள்..மிச்சமா இருக்கிற ஒண்டு ரெண்டை ஆள் கணக்குக்கு எதாவது ஒரு ரீமில சேர்ப்பாங்கள்...
இனி விளையாட்டுக்குள்ள போவம்... ஒரு வளவு அங்கை ஒரு பக்கம்தான் விக்கற் நடலாம் மற்றப் பக்கம் அனேகமா ஒரு கல்லு ஒண்டு இருக்கும் அதுதான் ஸ்ரம்ப்ஸ்... விக்கற்றில இருந்து ஒரு பற் தூரத்தில ரெண்டு ஒற்றைச் செருப்பு இருக்கும்.. அதுதான் வைட் ஸ்ரம்பஸ் முன்னால ஒரு பற் இடைவெளி ல கிறீஸ் அதில எப்பவும் நடு விக்கடுக்கு நேர பற்றால கிறீஸசை மாக் பண்ணி ஒரு கிடங்கே வந்திருக்கும்... இப்ப விளையாடுற வளவின்ர அளவைப் பொறுத்து பீல்டிங் தீர்மானிக்கப் படும்..... குறிப்பா எடுக்கேலாதபக்கத்து வீட்டு வளவுக்க பந்து போனால் அவுட், மதில்ல உருண்டு பட்டால் பவுண்ட்றி.....லாஸ்ட் மன் ஜ சான்ஸ்... இப்பிடி கனக்க ரூள்ஸ் இருக்கும்...
இதில முக்கியமான விசயம் ஒவ்வொரு ஊரிலயும் ரெண்டு மூண்டு ரீம் இருக்கும் அவை அவை ஒவ்வொரு வளவை ஆக்கிரமிச்சு தங்கட home ground ஆக மாத்தி வைச்சிருப்பினம். இதுக்குள்ள வேற ரீமோட மட்ச் விளாட போறது எண்டா, ஒரு நேரம் பிக்ஸ் பண்ணி, ஒரு இடம் மீட் பண்ணுறதுக்கு பிக்ஸ் பண்ணி பற்றுகள் விக்கட்டுகள் எல்லாம் முன்னுக்கு பாரில இருக்கிறவை வைச்சிருக்க போய் விளையாடி வெண்டு கொண்டு வார கெத்து இருக்கே அது ஒரு தனி திரில்.. இப்ப தற்செயலா மட்ச் விளையாடக்க தோக்கப் போற ரீம் எண்டா ஒரு மாதிரி அலாப்புவாங்கள், பாட் லைட் கோல் பண்ணிடுவாங்கள்... இப்பிடி கனக்க நடக்கும்..... இதுக்குள்ள ஸ்கூல் ரீமில காட் போலில கிரிக்கெட் விளையாடுறவங்கள் தங்கட கோச் மாருக்கு ஒளிச்சுத்தான் சொப்ட் போலில விளையாடுவாங்கள்... எனெண்டா அவங்கட பற்றிங் ஸ்ரைல் எல்லாம் டமேஜ் ஆகிடுமாம் எண்டு ஒரு வதந்தி... இருந்தாலும் MS Dhoni கெலிக்கொப்ரர் ஷொட் பழகினது சொப்ட் போலில தானே 😁😁😁😁
அதெல்லாம் ஒரு கனாக்காலம்..
கருத்துகள்
கருத்துரையிடுக