வடக்கு வீதி மேளச்சமா

 




ஈழத்தில் கோயில்களில் திருவிழாக் காலம் தொடங்கி விட்டால் அங்குள்ள தவில் நாதஸ்வர கோஷ்டிகளுக்கு மவுசு கூடிவிடும்...குறிப்பாக  உள்ளுர் கோவில்களில் சிறப்பு திருவிழாக்களில் அவர்களின் திறமையான வாசிப்புக்களைப் பார்க்கலாம்... குறிப்பாக 80 90 களில்  மறைந்த பஞ்சாபிகேசன், அளவெட்டி பத்மநாதன்,  பஞ்சமூர்த்தி கானமூர்த்தி குறிப்பிட தக்கவர்கள்....



வழமையா இரவுத் திருவிழா நேரத்தில சுவாமி வெளிவீதி உலாவருவார்.  அப்பிடியே வந்தால்   வடக்கு வீதியில 


மேளச்சமாதொடங்கும்....


 வடக்கு வீதி மேளச்சமா எண்டா குறைஞ்சது ஒரு மணித்தியாலம் நடக்கும்... அதில் கீர்த்தனைகள் முதல் திரைப்படபாடல்கள் , மகுடி எண்டு பலதரப்பட்ட பாடல்கள் வாசிக்கப்டும்... 



நாதஸ்வரவித்துவான்கள்  நடுவில நிற்க ரெண்டு பக்கமும் தவில் வித்துவான்கள் சமமா பிரிந்து நிற்பினம்.... ஒரு "ப" வடிவில....  நடுவில மைக் இருக்கும் இதில பஞ்சாபிகேசன் பத்மநாதன் கோஷ்டி எண்டா, தவில் புண்ணியமூர்த்தி, சின்னராசா இவைரெண்டு பேரையும் பார்த்தால்  " தில்லானா மோகனாம்பாள்" படத்தில வாற பாலையாவின்ர" ஞாபகம் வரும் இவை   கட்டாயம்  இடம் பெறுவினம்...



நாதஸ்வரம் எண்டு பார்த்தால்  பஞ்சாபிகேசன் குறிப்பிடத்தகவர்  நீண்ட நெடிய மெல்லிய தோற்றம் காதில கடுக்கன், ஒரு சிறிய குடுமி இதுதான் அவற்றை ரேட் மார்க் தோற்றம்.... ஆனால் அவர் வாசிக்க தொடங்கினால் அவர்தான் அன்றைய கச்சேரியின் ராஜா.... கர்நாடக சங்கீதத்தில அவரின் வாசிப்பு யாராலும் ஈடு கொடுக்க முடியாதது.... அவரின்  மகுடி வாசிப்பு, தில்லானா மோகனாம்பாளின் நலந்தானா, சிங்காரவேலனே அப்பிடியே அச்சொட்டா இருக்கும்... 


பஞ்சமூர்த்தி கானமூர்த்தி எண்டா அவை ஜனரஞ்சக கலைஞர்கள்  சினிமா பாடல்களை வாசிக்கிறதுக்கு நிகர் அவைதான்....



அதைவிட என் கே பத்மநாதன்... இவர் ஒரு  தவக்கலைஞன் எண்டே சொல்லலாம்....  சுத்த சைவக்காரன் , மது அருந்த மாட்டார், நல்லூரின் இப்பத்தான் கலைஞர் .அவர் ஒரு நாளும் சினிமாப் பாட்டு நாதஸ்வரத்தில் வாசிக்கவே மாட்டார்.... அதைவிட அவர் "நகுமோ மோகனனே" கீர்த்தனை வாசிக்கிற அழகே தனி......




அப்பிடியே வந்தால் தவில் தனியாவர்த்தனம் தொடங்கினால்... அந்த குறிச்சியே கலக்கும... அதிலயும் புண்ணியமூர்த்தி வாசிச்சா அவரின் கையில கட்டியிருக்கிற அட்சரக்கூடு கூட தாளம் போடும்  தொடர்ந்து  அவை முறையெடுத்து ஒவ்வொருத்தார தாளக்குறைப்புக்கு ஏற்ற மாதரி


 வாசிச்சு  கடைசியா ஒன்றாக  வாசிக்கிற வாசிப்பில அந்த ஊரே அதிரும்..




வழமையா வடக்கு வீதி மேளச்சமா எண்டா குறைஞ்சது ஒரு மணித்தியாலம் நடக்கும்... அதில் கீர்த்தனைகள் முதல் திரைப்படபாடல்கள் , மகுடி எண்டு பலதரப்பட்ட பாடல்கள் வாசிக்கப்டும்... 



அது ஒரு கனாக் காலம்....

கருத்துகள்