லொக்டவுண்
போன வருசம் 23rd March 2020 லொக்டவுன் அறிவிச்ச நாள்.... நாடு முழுக்க ஸ்தம்பிதமாகி .சலுனில இருந்து சுப்பர்மார்க்கட் மட்டும் கால வரையின்றி பூட்டச் சொல்ல உடனையே கடையள் எல்லாம் ஒரே சனம். சாப்பாட்டு சாமானில இரூந்து ரொயிலட் ரோல் மட்டும் சனம் அள்ளிக்கொண்டு போய் பதுக்கிச்சுது... எங்கை பார்த்தாலும் ஒன் வே கியூ..ஆரைப் பார்த்தாலும் ராணி காமிக்ஸ்ல வர்ர முகமூடி மாயாவி மாதிரி ஒரு மாஸ்க் கிளவுஸ் எண்டு கொம்பிளீட்டா மாறிச்சினம்... ஆனால் சங்கக்கடையில அரை றாத்தல் பாணுக்கும் சீனிக்கும் கியூவில நிண்ட நமக்கு இதெல்லாம் ஒரு சின்னப் பிரச்சினை..நாங்க கொரோணா கோடிக்குள்ள வந்து நிண்டாலும் அசராம நிக்கிற பேர்வழிகள் தானே
இப்பிடி உந்த லொக்டவுணால அவனவன் வீட்டுக்க வருசக்கணக்கா இருந்து படுகிற பாட்டில மூளை பிசகப் போகுது.... பிள்ளை குட்டியள் எல்லாம் போனிலயும் கொம்பியூட்டரிலயையும் தான் வாழ்க்கை நடத்துதுகள், மனிசிமார் வேலை செய்யிற நேரத்திலயும் கக்கூசை கழுவி கத்தரிக்காயை வெட்டு எண்டு ஒருபக்கம் அதுக்குள்ளால வாக்கிங் ஜொக்கிங் போனவையும் எண்டு கனபேர்.. என்ன தான் சொன்னாலும் கோவிட்டுக்கு பயந்து வீட்டுக்குள்ள அடங்கி ஒடுங்கி ஒரு வருசமாச்சு..
இப்ப ஆண்டவன் புண்ணியத்திலஒரு மாதிரி வக்சீனும் வந்தாச்சு,ஏரியாவில இருக்கிற வயசு போனவை எல்லாம் ஊசி போட வெளிக்கிட்டினம்.. ஊசி அடிக்கிற வேகத்தை பார்த்தா, இன்னும் ஒரு ரெண்டு மாதத்தில அடிச்சு முடிப்பாங்கள் போல... அந்த நேரம் எங்களையும் திறந்து விட்டிருவாங்கள் போல....
நாங்களும் நாலு மனுசரை இந்த வருசமாவது நேர பார்க்கலாம் எண்டு காத்திருக்கிறம்...

கருத்துகள்
கருத்துரையிடுக