இங்கிலாந்து இந்தியா இறுதி ஆட்டம்....
நேற்றைய இங்கிலாந்து இந்தியா இறுதி ஆட்டத்தில் வெற்றியை மயிரிழையில் இழந்து தொடரில் தோல்விகண்டது இங்கிலாந்து...
இதில் தொடர்ச்சியாக விக்கட்டுகள் வீழ்ந்தாலும் கத்துக்குட்டி சாம் கர்ரன் இறுதிவரை Rashid பின்னர் Moen Ali உடன் partnership அமைத்து வெற்றியின் விளிம்புக்கு இங்கிலாந்தை அழைத்துச் சென்றார்...இதில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி 95 ஓட்டங்களை எடுத்திருந்தார். இவர் ஒவ்வொரு over இன் இறுதிப்பந்திலும் சிங்கிள் ஓட்டம் எடுத்து மறுமுனையில் ஆட்டத்தை தொடர்ந்த விதமும் சிறிது சிறிதாக run rate ஐ குறைத்து இலக்கை நெருங்கிய விதமும் ஆட்டத்தை finish பண்ண முயற்சித்த விதமும் உலகின் தலைசிறந்த Finisher என்று கிரிக்கெட் வல்லுனர்களால் போற்றப் படும் MS DHONI இன் சாயல் இருந்தது குறிப்பிடத்தக்க விடயம்.. என்னதான் இருந்தாலும் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் எண்ட மாதிரி CSK இன் கோட்டையில் வளர்ந்தவர்களும் டோனியைப் பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை...
எது எப்படியோ out of form இல் இருந்த நட்ராஜன் சிறப்பாக பந்து வீசி ஆறு ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து இந்தியாவை வெற்றிக்கு அணி வகுத்தது.... அவரின் அனாயாசமான பந்துவீச்சு திறனையும் தன்னம்பிக்கயையும் காட்டுகின்றது.....
எத்தனை ஜாம்பவான்கள் வந்தாலும் உலகத்தின் அத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரரையும் மைதானத்தில் கதிகலங்க வைத்த ஒரே ஒரு பெயர் MS DHONI... அவரின் CSK குகைக்குள் இருந்தது வளர்த்த சாம் கர்ரனின் இந்த ஆட்டம் பெரிய அதிசயமே இல்லை....
யார் என்ன சொன்னாலும் போராடித் தோற்பதிலும் ஒரு திமிர் இருக்கத்தானே செய்யும்...
Well done England👏👏👏👏👏

கருத்துகள்
கருத்துரையிடுக