புளிச்ச கள்ளும் கடலை வடையும்

 




புளிச்ச கள்ளும் கடலை வடையும்



என்தான் சிிங்கிள் மோல்ட்  விஸ்கி அடிச்சாலும்  இறக்கி முட்டிக்க இருந்து புளாவுக்க ஊத்தி குடிக்கிற ரேஸ்டுக்கு எந்த சீமைச் சரக்கும் வராது..  நல்லபுளிச்ச கள்ளை ஒரு ஹொட்டான மத்தியான நேரத்தில அடிச்சுப் போட்டு அப்படயே
 ஒரு மரத்துக்கு கீழ பாயைப் போட்டு படுக்கிற சுகமே தனி.... கள்ளும் கடலை வடையும் நல்லா இருக்கும்....


 
சாதாரணமா கள்ளடிக்கப் போறவை அமைதியா அடக்கமா தவறணைக்கு போவினம்... அங்க போய் ரெண்டு போத்தில் கள்ளு குடிச்ச உடனை அவைக்கு உலகத்தில இல்லாத துணிவு வரும்.... அதுவும் கள்ளடிச்சுட்டு திரும்பி வர்ர பொழுது  அவையின்ர route பிளானைப் பார்த்தா அது ஒரு sin graph மாதிரி இருக்கும்.. அதிலயும்  அவையின்ர வாயால வாற தூசணங்களை கேட்டா அவைதான் ஊர்ச் சண்டியர் மாதிரி.. அவை சைக்கிளில போச்சினம் எண்டா சைக்கிள் காண்டிலும் முன் சில்லும் கிட்டத்தட்ட 270 பாகையில திரும்பும்...

குறிப்பா அரை குறையா இங்கிஸ் படிச்சவை எண்டா அவையின்ர வாயால வாற இங்கிலிசில ஒரு கிரம்மர் புத்தகமே எழுதலாம் ....

 இதுக்குள்ள சின்னவயசிலஅம்மம்மா அப்பத்துக்கு மா குழைக்கிற நேரத்தில எங்கட வளவுக்க இறக்கிற கள்ளில கொஞ்சம் வேண்டி வைக்க அதை நாங்க களவா எடுத்துக் குடிச்சு அடிவேண்டினதும் மறக்கேலாது 😁
இப்பல்லாம் அனேகமா வெளிநாட்டில இருந்து போறவையின்ர ஒரு ட்றீம் கசூரினா பீச்சுக்குப் போய் நல்ல புளிச்ச கள்ளை குடிச்சுட்டு கடலுக்க நீந்தவேணும் எண்டுதான்... இப்பிடி கள்ளு எங்கட வாழ்க்கையில நீங்கா இடம் பிடிச்சு இருககு....

கருத்துகள்