அன்னையர் தினமும் பெண்விடுதலையும்






 அன்னையர் தினமும் பெண்விடுதலையும்



பெண் எண்டா பேயும் இரங்கும் எண்டு ஒரு பழமொழி இருக்கு...ஆனால் இந்தக்காலத்தில பொம்பிளைப் வெளியில விடவே பயமா இருககு ....நாட்டில நடக்கிற சம்பவங்களை பார்கிறப்ப பெண் என்கிறவளை ஒரு போதைப் பொருளாவோ போகப் பொருளாவோ பார்க்கிற நிலமை வந்துட்டுது.... அண்மையில நடந்த நிர்ப்பயா கூட்டு வல்லுறவு , மற்றும் எங்கட நாட்டில நடந்த வித்தியா கூட்டு வல்லுறவு ஏன் இங்கு நடந்த Sarah  Evarad கொலைவழக்கு என்பன மனித குலத்த்தையே கலங்க வைச்ச நிகழ்வுகள்... இருந்தாலும் காவல் துறையினரின்  அர்ப்பணிப்புகளால்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்பட்டது வரவேற்கத்தக்கது.. இருந்தாலும்  . எது எப்படி எண்டாலும்  எங்கட நாடுகளில பொம்பிளையளின்ர அடக்க ஒடுக்கமும் உடைகலாச்சார கட்டுப்பாடுகளும் இந்த மாதிரியான குற்றங்கள் நடக்கிறதை கட்டுப்படுத்தவே அந்தக்காலத்தில உருவாக்கப் பட்டவை  அத்தோடு இந்த மாதிரியான நிகழ்வுகளும்  மிகவும் சொற்ப அளவிலேயே நடந்திருக்கு .

இருந்தாலும் அண்மையில நடந்த SARAH EVERAD கொலை நாடு முழுக்க ஏன் உலகம் முழுவதும் ஒரு எதிர்வலையை கொண்டு வந்திருக்கு.... அதிலும் இந்தக் குற்றத்தில முக்கிய குற்றவாளியாக காவல்துறை உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கின் முக்கியமான கட்டம்....

இதற்கெல்லாம் என்ன காரணம் ?
  மேலைத்தேய கலாச்சாரம் காலூன்றிய பிறகு ஆடை கலாச்சாரங்களில் அவர்களின் ஆதிக்கம் வந்ததா?
 
சினிமாவில் பெண்கள்  சித்தரிக்கும் விதத்தங்களில்  இந்த மாதிரியான குற்றங்கள் அதிகரித்துள்ளனவா?..

 பெண்கள் எண்டா ஒரு பலகீனமானவர்கள்என்ற ஒரு சிந்தனையா?


 அவர்கள் உடை நடை பாவனைகள் ஒரு காரணமா?

 சிலரின் தலைக்குள்ள இருக்கிற பிரச்சனையா?


பெண்கள் ஆண்களோடு சுதந்திரமாக பழகும் விதமா?

சில ஆண்களுக்கு பெண்கள் பற்றிய ஒரு  அசண்டையீனமா?


இப்படியான குற்றங்களுக்குரிய தண்டனைகள் குறைவா?


எது எப்படி எண்டாலும் நாங்கள் எங்கட ஆண்  பிள்ளைகளுக்கு சின்னவயசில இருந்தே அவர்களுக்கு பெண்களை மதிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக் கொடுக்க வேணடும்  அதேநேரத்தில் பெண்பிள்ளைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புப்பு பற்றி
 சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுக்கவேண்டும்...........

இதுதான் அன்னையர் தினத்தில் நாங்கள் செய்யவேண்டும் 
இதைவிட்டுட்டு அம்மாக்கு பூவும் சொக்குலேட்டும் குடுத்துட்டு  மற்றைய பெண்களை மதிக்காவிட்டால் அது பிரசயோசனமே இல்லை....


கருத்துகள்