பழஞ்சோறு

 


பழஞ்சோறு

அனேகமா ஊரில இருந்தவை பழஞ்சோறை மிஸ்பண்ணி இருக்கமாட்டினம்...என்னதான் மக்டொனால்ட் பிரேக்பாஸ்ட், கொஸ்ரா கோப்பியும் சாப்பிட்டாலும்  அந்த பழஞ்சோறுக்கும்  பழந்தண்ணீருக்கும்  இணையா எதுவும வராது...😎 பொதுவா வீக்எண்ட் எண்டா அனேகமானவை கட்டாயமா சாப்பிட்டு இருப்பினம். பொதுவா வெள்ளிகிழமையெணாடா வீடுகளில மரக்கறிச்சாப்பாடு அதுவும் சமையல் அமர்க்களமா இருக்கும்..... இதில மிஞ்சிற சாப்பாடு தான் அடுத்தநாள் பழஞ்சோறா மாறும்.


பழஞ்சோறுக்கு அருமையானது கைக்குத்தல் அரிசி அல்லது புழுங்கல் அரிசி... இதிலவாற மிஞ்சின சோறை எங்கட அப்பம்மா ஒருமண்சட்டிக்க போட்டு நல்ல குளிர்த்தண்ணி விட்டு மூடிவைச்சுட்டு அடுத்தநாள் காலம்பற எழும்பி மிச்சம் சொச்சமா இருக்கிற கறியள்  அதுவும் முதல் நாள் சமைச்ச மரவள்ளிக்கிழங்கும் கரணைக் கிழங்கு கறியும் எண்டா சொல்லி வேலை இல்லை. இதை எல்லாத்தையும் போட்டு  நல்ல தயிரும் விட்டு குழைச்சு காலம்பற ஒரு ஒம்பது பத்து மணிக்கு எல்லாயையும் சுத்தவரஇருத்தி ஒருவாழையிலைத் துண்டில கையில தருவா... 
அந்தப் பழஞ்சோறோட சின்ன வெங்காயத்தையும் மோர்மிளகாயையும் கடிச்சுக் கொண்டு சாப்பிடுற சுகம் இருக்கே அதுக்கு நிகரா ஒண்டும் இல்லை...
 அதோட அந்த பழந்தண்ணிக்குள்ள மோர்விட்டு வெங்காயமும் பச்சைமிளகாயும் உப்பும் போட்டு குடிக்கிற சொல்லி வேலை இல்லை....

கருத்துகள்