கிரிக்கெட்டின் அசுரன் KING VIV🤺

 





கிரிக்கெட்டின் அசுரன் KING VIV🤺




எழுபது எண்பதுகளில்  கிரிக்கெட் எண்டா West Indies தான்... பந்துவீச்சுக்களிலும் சரி batting களிலும் சரி அசுரத்தனத்தை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள்தான்....  நாள்கணக்கில கிரிக்கெட் மட்டையை" வைச்சு தடவித் தடவி சாதனை புரிஞ்ச கவாஸ்கர் போன்றவை மத்தியில அடித்தாடு இல்லை அவுட்டாகு" எண்ட மாதிரியான ஒரு குறிக்கோளை அறிமுகம் செய்தவர்களும் அவர்கள் எண்டு சொல்லலாம்....  


இதில் குறிப்பிடத்தக்கவர் Sir விவியன் ரிச்சர்டஸ்... இவர் ஆடுகளத்தில இறங்கினா வெங்கலக் கடையுக்க யானை புகுந்த மாதிரி த்தான்.. அவர் அடிக்கிற  அடியில மட்டும் இல்ல இவரின்ர பிரசன்னமே எதிரி அணியை  திணறடிக்கும் எண்டு சொல்லலாம்  அவரின் signature shot முன்னேறிவந்து முழங்காலில் இரு ந்த பந்தை மடக்கி அடிக்கும் விதம் தான்.. அந்தப் பந்து off stump க்கும் mid off க்கும் இடையால போற வேகத்தில மொத்த எதிரணிகக்கும் "உச்சா" போகாத குறையா இருக்கும்...😎 அது போல அவர் வேகமா முன்னேறி வந்து அடிக்கிற flick shot  வேற லெவல்.... 🏂"ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை" எண்டு சொன்னமாதிரி  இப்ப எல்லாரும் ஆடுகளத்தையும் பந்தையும் குறை சொல்லுற காலகட்டத்தில  அந்த நாட்களில எல்லாவித ஆடுகளங்களிலயும் எல்லாருக்கும் சிம்ம சொப்பனமா இருந்தவர் Sir King Viv.. 


சேர் என்பதற்கு தமிழில் வயவர் என்கின்றனர். வயவர் என்றால் படைத்தலைவன் என்று பொருள். அப்படிப் பார்த்தா King Viv கிறிக்கெற்றில் ஒரு முடிசூடா அரசனா இருந்திருந்ததால் தான் பிரித்தானியர் அவருக்கு Sir பட்டம் கொடுத்திருக்கினம் என்பதில உண்மை...

. இவரின் சாதனைகளை இனிவருபவர்கள் முறியடிக்கலாம்  ஆனா  இங்கிலாந்தும் ஆஸ்த்ரேலியாவும் கிறிக்கெற்றில் கோலோச்சிக்கொண்டு இருந்த நேரத்தில நானும் ரவுடிதான் எண்டு கிறிக்கெற் மட்டையால் அனைத்து வேகப் பந்து வீச்சாளர்களையும் அடிச்சு நெருக்கி உலகக் கிறிக்கெற்றை அடுத்த நிலைக்கு உயர்த்தியவர்...

தமிழர்களின் கிறிக்கெற்றுடன் நெருங்கிய உறவு கொண்டவர்...

கருத்துகள்