நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்..

 நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்..



கடும் கூர் முழு மொட்டை
JACK OF ALL TRADE MASTER OF NOTHING





களத்தூர் கண்ணம்மாவில தொடங்கிய ஒரு பயணம் இன்று மட்டும் எத்தனையோ களங்கள் கண்டு சாதனைகள் படைத்துக் கொண்டு இருக்கிறது....
கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞன் தனியே நடிப்பு மட்டும் இல்லாமல் ஒரு கவிஞனா, நல்ல நடனக் கலைஞனா,  கதாசிரியனா, இயக்குநரா, பாடகனா,  பாடலாசிரியரா, அபூர்வ சகோதரர்களில , அப்பு கமல், 16 வயசினிலே சப்பாணியாகி, அபூர்வ சகோதர்களில் தன்னைவிட வயது கூடிய ஸ்ரீபிரியாவை காதலிக்கும் ஒரு புரட்சிகர இளைஞனாக, ஆளவந்தானில் கடவுள் பாதி மிருகம் பாதியாகி, நாயகனில் மும்பாயை மிரட்டும் தாதா வேலு நாயக்கராக, தேவர்மகனில் அந்த சிவாஜிக்கே சவால்விடும் நடிப்பில் பெரியத்தேவரின் மகன் சக்திவேலாக , எத்தனையோ ஆச்சரியங்களை அள்ளித் தந்த, மைக்கேல் மதன காம ராஜன், அதில் திருடன், மைக்கேல்; தொழிலதிபர், மதனகோபால்; சமையல்காரர், காமேஷ்வரன்; தீயணைப்பு வீரர், ராஜு. அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருப்பார், கமலாக,  எல்லாவற்றுக்கும் மேலாக சுந்தரி நீயும்  சுந்தரன் ஞானும்  பாடலில் ஜானகி அம்மாவுக்கே இணையாக  இசைஞானியே வியக்கும் வண்ணம் பாடல் பாடிய பாடகனாக, குணாவில் அபிராமியைத் தேடும் பைத்தியகார குணாவாக....  குருத்திப்புனலில் குடும்பத்துக்காக தீவிரவாதிக்கு உதவும் ஒரு complicated character ஆக , மன்மதன் அம்பு வில் திரிஷாவுக்கே கவிதையால் அம்பு விடும் மன்னாராக... அவ்வை சண்முகியில் கமலா இது! என, ஆச்சரியப்படும் வகையில், சண்முகி மாமியாகி  ஜெமினி கணேசனே  ஜொள்ளு விடும் ஒரு கமலா பெண்ணா என்றாகி....
வரலாற்றை வலியுறுத்தும் ஹேராமாக....தசாவதாரத்தில் பத்து அவதாரங்களில்  பின்னியெடுக்கும் one man army யாக வந்த கமல்   விஸ்வரூபத்தை தனது விஸ்வரூபத்தில் காட்டியிருப்பார்...
இப்படி கலைக்காகவே தனைத்தந்த கமல் 
கடும்கூர் முழு மொட்டை எண்ட படியும் Jack of all trade master of nothing போல தனது கலைவாழ்க்கையிலும் தனிவாழ்க்கையிலும் சறுக்கிவிட்டார்...
இருந்தாலும்  நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 
ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கருத்துகள்